ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்போம்


ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்போம்
x

சமூகம் என்பது ஒருவரோ, இருவரோ ஒருங்கிணைந்து உருவாக்குவது அல்ல. ஒழுக்கம் நிறைந்த சமூகம் என்பது ஒரு நாட்டில் உள்ள அனைவரின் பங்களிப்பால் உருவாக வேண்டியது. அப்படிப்பட்ட சமூகம் சில நபர்களின் சுயநலனுக்காக சமூகத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி சீர்குலைய செய்கின்றனர்.

நாம் ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

பெருமை தரும் கருவி

சமூகம் என்பது ஒரு மழலையைப் போல் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் தன்னை மாற்றிக் கொள்ளும். அது நல்லவர்களின் கையில் கிடைத்தால் தூய சமூகம். கள்வர்களின் கையில் கிடைத்தால் ஒழுக்கமில்லாத சமூகம். ஒரு சமூகத்தில் நிறைய நன்மைகள் மற்றும் தீமைகளும் உண்டு. நன்மைகளுள் சிலவற்றை குறிப்பிடுகின்றேன்.

சமூகத்தில் ஒருவர் உயர்ந்த பதவியில் இருந்தால் அவர் சமூகத்தில் உயர்ந்து காணப்படுகிறார் என்று தான் கூறுவோம். இங்கே சமூகம் நமக்கு பெருமை தரும் கருவியாக பயன்படுகிறது. அதுபோல் ஒவ்வொருவருக்கும் அவரவர் நாடு, அவரவர்களின் வீடு, அதுதான் அவர்கள் அடையாளம். நாங்கள் இந்தியர்களாக ஒன்றுபட்டு வாழ்ந்து வருகிறோம்.

ஒற்றுமையை வளர்ப்போம்

சமூகம் என்னும் ஒரு வார்த்தையில் ஒற்றுமை, வேற்றுமை என அனைத்து பண்பையும் உள்ளடக்கியது. தீமைகளை செய்த ஒருவரை தீயவர் என்று அழைக்கிறோம். அவர் திருந்தி வாழ்ந்தால் நல்லவர் என்று அழைக்க நம் சமூகம் மறுக்கிறது. அதையும் மீறி அழைத்தாலும், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை.

நாம் பிறருக்கு தீங்கு செய்ய நினைக்காமல் வாழ்ந்தாலே ஒழுக்கம் நிறைந்த சமூகம் உருவாகிறது. நாம் ஒற்றுமையை வளர்த்து சமூகத்தை பாதுகாக்க முன்வரவேண்டும். மாணவர்களாகிய நாம் அன்பை பகிர்ந்து ஒரு தூய்மையான சமூகத்தை உருவாக்கி பாதுகாப்போம் என சபதம் ஏற்போம்.


Next Story