இயற்கையைப் போல நாமும் அனைவருக்கும் உதவ வேண்டும் - சக்தி அம்மா வேண்டுகோள்


இயற்கையைப் போல நாமும் அனைவருக்கும் உதவ வேண்டும் - சக்தி அம்மா வேண்டுகோள்
x

இயற்கையைப் போல நாமும் அனைவருக்கும் உதவ வேண்டும் என்று சக்தி அம்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு மனிதன், உயிர் வாழ உணவு அவசியம். உயிருக்கு ஆதாரமான உணவுக்கு விவசாயம் அவசியம். அவ்விதமான உலகிற்கு உணவும், அதன் மூலம் உயிரையும் வழங்குகின்ற இயற்கை அன்னைக்கும், விவசாய பெருமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் திருநாளே பொங்கல் பண்டிகை. இயற்கையை பாதுகாத்து வாழ வேண்டும், இயற்கையை போற்றி வாழ வேண்டும், இயற்கையோடு இணைந்து வாழ வேண்டும் என்று வலியுறுத்தும் பண்டிகையே பொங்கல் பண்டிகை. இயற்கையை போற்றி பாதுகாக்கும் இடத்தில் பசுமை படர்ந்திருக்கும். பசுமை இருந்தால் வளமை இருக்கும். வளமை இருந்தால் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கை செழுமையாக இருக்கும். இயற்கை அன்னை நமக்கு உதவி செய்வது போல, நாமும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

உங்களது வீடுகளின் உள்ளேயும் வெளியேயும் சுத்தப்படுத்துவதோ, உங்களின் உடலை தூய்மைப்படுத்துவதோ பொங்கல் கொண்டாட்டம் இல்லை. அது உங்களுடைய ஆன்மாவை தூய்மைப்படுத்த, மனதில் உள்ள தீய சக்திகளை விலக்குவதற்காக கொண்டாடப்படுகிறது. எனவே உங்களுடைய குழந்தைகளுக்கு, பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதன் காரணங்களை கற்றுக்கொடுத்தால் அது அவர்களுக்கு சிறந்த பாடமாக அமையும். அதன் மூலம் எதிர்கால தலைமுறையினர் ஆனந்தமாகவும், அமைதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ்ந்திடும் சூழ்நிலை உருவாகும்.

அனைவருக்கும் அன்னை நாராயணியின் திருவருளுடன், பொங்கல் நல்வாழ்த்துக்கள்.


Next Story