ஸ்கார்பியோ கிளாசிக்


ஸ்கார்பியோ கிளாசிக்
x

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தயாரிப்புகளில் ஸ்கார்பியோ மாடல் பெரும் வரவேற்பைப் பெற்றதாகும். இந்த மாடலில் தற்போது கிளாசிக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஸ்கார்பியோ மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையில் இந்த மாடலுக்கு மிகப் பெரும் வரவேற்பு உள்ளது. இதைத் தொடர்ந்து கிளாசிக் மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

புதிய வடிவிலான முகப்பு விளக்கு, பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு, பின்புற விளக்கு மற்றும் 17 அங்குல டயமண்ட் கட் அலாய் சக்கரம் இதற்கு மேலும் அழகு சேர்க்கிறது.

இதில் இரண்டாம் தலைமுறை எம்ஹாக் என்ஜின் உள்ளது. இது அலுமினியத்தால் ஆனது. இதனால் வாகனத்தின் எடை 55 கிலோ குறைந்துள்ளது. இதன் மூலம் 14 சதவீதம் எரிபொருள் சிக்கனம் ஏற்பட்டுள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 6 மானுவல் கியர்களைக் கொண்டுள்ளது.

இதில் 22.86 செ.மீ. அளவுள்ள இன்போ டெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது நவீன தொழில்நுட்பங்களான போன் மிரரிங் உள்ளிட்ட செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையிலானது.

இதில் கிளாசிக் எஸ் மற்றும் கிளாசிக் எஸ் 11 என இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. சிவப்பு, கருப்பு, சில்வர், வெள்ளை மற்றும் கிரே வண்ணங் களில் வந்துள்ளது.


Next Story