கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி சுஸுகி சியாஸ்


கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி சுஸுகி சியாஸ்
x

மாருதி சுஸுகி நிறுவனத் தயாரிப்புகளில் சியாஸ் மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.

மாருதி சுஸுகி நிறுவனத் தயாரிப்புகளில் சியாஸ் மாடல் பிரீமியம் பிரிவைச் சேர்ந்ததாகும். இந்த கார்கள் நிறுவனத்தின் உயர்ரக மாடல்களை விற்பனை செய்யும் நெக்ஸா விற்பனையகங்களின் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாடலில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டு தற்போது அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. மேலும் கண்கவர் இரட்டை வண்ணங்களில் இது கிடைக்கும்.

இதில் தற்போது எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிடி சிஸ்டம் (இ.எஸ்.பி.), ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே உள்ள ஏ.பி.எஸ். மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க உதவும் ஐ-சோபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்டவை இப்புதிய மாடலில் உள்ளது. முன்புறம் இரண்டு ஏர்பேக்குகள் உள்ளதாக இப்போது வந்துள்ளது. இரட்டை வண்ணங்களில் (சிவப்பு-கருப்பு, கிரே-கருப்பு, பிரவுன்-கருப்பு) கிடைக்கிறது.

மேனுவல் கியர் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.11.15 லட்சம். ஆட்டோமேடிக் கியர் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.12.35 லட்சம். இது வழக்கமான 105 ஹெச்.பி. திறன் கொண்ட 1.5 லிட்டர் கே. 15 சி பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. மேனுவல் கியர் மாடல் 5 கியர்களையும், ஆட்டோமேடிக் மாடல் 4 கியர்களையும் கொண்டது.

சோதனை ஓட்டத்தில் மேனுவல் கியர் மாடல் ஒரு லிட்டருக்கு 20.6 கி.மீ. தூரம், தானியங்கி கியர் மாடல் ஒரு லிட்டருக்கு 20.4 கி.மீ. தூரம் ஓடியுள்ளது. காலத்திற்கேற்ப பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் மேம்படுத்தப் பட்ட அம்சங்கள் இம்மாடலில் தொடர்ந்து புகுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்படுகிறது.

1 More update

Next Story