மாருதி சுஸுகி பிரான்ங்ஸ்


மாருதி சுஸுகி பிரான்ங்ஸ்
x
தினத்தந்தி 23 March 2023 10:43 AM GMT (Updated: 28 March 2023 6:02 AM GMT)

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களைத் தயாரிக்கும் மாருதி சுஸுகி நிறுவனம் புதிதாக பிரான்ங்ஸ் என்ற பெயரிலான புதிய மாடல் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்ய உள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2023 கண்காட்சியில் மாருதி நிறுவனம் ஜிம்னி மற்றும் பிரான்ங்ஸ் மாடல் கார்களை காட்சிப்படுத்தியிருந்தது. இவை இரண்டுமே பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்த மாடலாகும்.

தற்போது பிரான்ங்ஸ் மாடல் காருக்கு 13 ஆயிரம் பேர் முன் பதிவு செய்துள்ளனர். இதில் ஐந்து வேரியன்ட்கள் (சிக்மா, டெல்டா, டெல்டா பிளஸ், ஜீட்டா மற்றும் ஆல்பா) அறிமுகமாகின்றன. இதன் முன்புறத் தோற்றம் வித்தியாசமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. தானியங்கி செயல்பாடு கொண்ட எல்.இ.டி. பன்முக ரிப்ளெக்டர் முகப்பு விளக்கு, எல்.இ.டி. டி.ஆர்.எல்., 16 அங்குல அலாய் சக்கரம் வாகனத்துக்கு பிரம்மாண்ட தோற்றத்தை அளிக்கிறது.

காரின் உள்புறம் 9 அங்குல ஹெச்.டி. ஸ்மார்ட் பிளே இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு இணைப்பு வசதி கொண்டது. இனிய இசையை வழங்க ஆர்கமிஸ் சரவுண்ட் சிஸ்டம் உள்ளது. தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல் , தலைக்கு மேல் டிஸ்பிளே, 360 டிகிரி சுழலும் கேமரா, வயர்லெஸ் சார்ஜர், சுஸுகி கனெக்ட் இணைப்பு கொண்டது. இதன் மூலம் 40 விதமான கூடுதல் செயல்பாடுகளைப் பெறலாம். பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன.

இது தவிர இ.எஸ்.பி., ஹில் ஹோல்ட் அசிஸ்ட், கார் உருள்வதைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சம், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட் வசதிகள் உள்ளன. குழந்தைகள் பயணிப்பதற் கேற்ப ஐசோபிக்ஸ் இருக்கை வசதி கொண்டது. இதில் கே 12 என் 1.2 லிட்டர் டியூயல் ஜெட் என்ஜின் மற்றும் 1 லிட்டர் டர்போ பூஸ்டர் என்ஜின் மாடல்கள் உள்ளன. இதன் நீளம் 3,955 மி.மீ., அகலம் 1,765 மி.மீ., உயரம் 1,550 மி.மீ. ஆகும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.6.75 லட்சத்திலிருந்து சுமார் ரூ.11 லட்சம் வரை எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story