மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. எடிஷன் 55


மெர்சிடஸ் ஏ.எம்.ஜி. எடிஷன் 55
x
தினத்தந்தி 26 May 2022 11:07 AM GMT (Updated: 26 May 2022 11:34 AM GMT)

சொகுசு மற்றும் பிரீமியம் கார்களைத் தயாரிக்கும் மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக சி.எல்.ஏ. பிரிவில் எடிஷன் 55 என்ற புதிய மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

நிறுவனத்தின் ஏ.எம்.ஜி. மாடல் உருவாக்கப் பட்டு 55 ஆண்டுகள் நிறைவடை வதைக் கொண்டாடும் வகையில் எடிஷன் 55 அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமே 55 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏரோ டைனமிக் வடிவிலான இந்த மாடலில் பல சிறப்பம்சங்கள் சேர்க்கப் பட்டுள்ளன.

19 அங்குல குறுக்கு ஸ்போக் கம்பிகளைக் கொண்டதான மெட்டாலிக் கிரே நிறத்திலான சக்கரம், முன்புற ஸ்பிளிட்டர் உள்ளிட்டவை அழகிய தோற்றத்தை அளிக்கிறது. உள்புறத்தில் மிக அழகிய கருப்பு-சிவப்பு நிறத்திலான மிருதுவான நாப்பா பிராண்ட் தோல் இருக்கைகள் சொகுசான பயணத்தை உறுதி செய்கிறது. ஸ்டீயரிங் சக்கரம் மைக்ரோ பைபரால் ஆனது. தரைப்பரப்பில் உயர் தரத்திலான புளோர் மேட் ஏ.எம்.ஜி. லோகோவைக் கொண்டுள்ளது.

இதில் எடிஷன் 55 என்ற எழுத்துகளும் சிவப்பு நிறத்தில் எழுதப்பட்டுள்ளன. 2 லிட்டர் நான்கு சிலிண்டர் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்ட இது 310 கிலோ வாட் திறனையும், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை யும் வெளிப்படுத்தும். இதில் 8 டியூயல் கிளட்ச் வசதி உள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்டவையாக இவை வந்துள்ளன.


Next Story