மோட்டோரோலா ரேஸர் மடக்கும் ஸ்மார்ட்போன்


மோட்டோரோலா ரேஸர் மடக்கும் ஸ்மார்ட்போன்
x

மோட்டோரோலா நிறுவனம் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போனை ரேஸர் 2022 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த ஆகஸ்டில் சீனாவில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த மாடல் ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. மடக்கும் வகையிலான போலெட் திரை இதில் பயன் படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் வெளிப்புறத்தில் 2.7 அங்குல முழுமையான ஹெச்.டி. பிளஸ் கோலெட் திரை உள்ளது. இதில் 8-வது தலை முறை ஸ்நாப்டிராகன் பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. நினைவகம் கொண்டது. பின்புறம் 50 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 32 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளன. 3500 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 30 வாட்டர்போ சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.98,440.

1 More update

Next Story