எம்.எஸ்.ஐ. லேப்டாப்


எம்.எஸ்.ஐ. லேப்டாப்
x

எம்.எஸ்.ஐ. நிறுவனம் புதிய ரக லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது. இவை அனைத்தும் 13-வது தலைமுறை இன்டெல் கோர் பிராசஸர் கொண்டது.

லேப்டாப் சூடேறுவதைத் தவிர்க்கும் வகையில் பல குழாய்கள் இதில் இடம்பெற்றுள்ளன. இதனால் வெப்பம் பகிரப்பட்டு சூடேறுவது குறைகிறது. வீடியோகேம் பிரியர்களுக் கென எம்.எஸ்.ஐ. டைட்டன் ஜி.டி. மாடலும் ரெய்டர் ஜி.இ. சீரிஸ் மாடலும் அறிமுகம் செய்யப் பட்டுள்ளன.

இதில் 4-கே ரெசல்யூஷனை வெளிப்படுத் தும் திரை உள்ளது. இத்துடன் ஸ்டெல்ஸ் சீரிஸ் என்ற பெயரிலான லேப்டாப் வகைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.58,990 முதல் ஆரம்பமாகிறது. பிரீமியம் மாடலின் விலை சுமார் ரூ.6,71,990.

1 More update

Next Story