தென் ஆப்பிரிக்காவில் வினோதம்! ஒரு நிமிடத்தில் 3க்கும் அதிகமான கோழிக்கால்களை சாப்பிட்டு உலக சாதனை படைத்த பெண்!


தென் ஆப்பிரிக்காவில் வினோதம்! ஒரு நிமிடத்தில் 3க்கும் அதிகமான கோழிக்கால்களை சாப்பிட்டு உலக சாதனை படைத்த பெண்!
x

தென் ஆப்பிரிக்காவின் சிமானிலே என்ற பெண்மணி ஒரு நிமிடத்தில் 120 கிராம் கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

டர்பன்,

தென் ஆப்பிரிக்காவின் சிமானிலே என்ற பெண்மணி ஒரு நிமிடத்தில் 3 1/2 கோழிக்கால்களை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

டர்பன் உம்லாசியில் உள்ள மாஷமாபிளேன்னஸ் லவுஞ்ச் உணவகத்தில் இந்த போட்டி நடந்தது.ஒவ்வொரு போட்டியாளருக்கும் 10 அவுன்ஸ்(சுமார் கால் கிலோ) என்ற சமமான அளவில் கோழியின் கால்கள் உணவாக வழங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் ஒரு நேரத்தில் ஒரு கோழிக்கால் மட்டுமே சாப்பிட அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போட்டியில், ஒவ்வொரு போட்டியாளரும் உண்ணும் கோழியின் கால்களின் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை, மாறாக அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட நேரத்திற்குள் எவ்வளவு கிராம் உண்டனர் என்பதை அளவிட்டு அதன்மூலம், வெற்றியாளார் யார் என்பது தீர்மானிக்கப்பட்டது.

ஒவ்வொரு போட்டியாளரும் வெவ்வேறு உத்திகளைக் கொண்டிருந்தனர், சிலர் மென்று தின்றனர், சிலர் அப்படியே முழுங்கினர். போட்டியின் முடிவில், கின்னஸ் குழு நடுவர் ஒவ்வொரு தட்டுகளையும் எடைபோட்டு, எவ்வளவு நுகரப்பட்டது என்பதைக் கணக்கிட்டார்.

அதில் தென் ஆப்பிரிக்காவின் வுயோல்வெத்து சிமானிலே என்ற பெண்மணி பிற போட்டியாளர்களை விட இரண்டு மடங்கு கோழிக் கால்களை சாப்பிட்டார். அவர் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அவர் ஒரு நிமிடத்தில் 4.26 அவுன்ஸ் அதாவது சுமார் 120 கிராம் அளவு சாப்பிட்டார்.

எவ்வளவு வேகமாக அதிகமான உணவுகளை உண்ணக்கூடியவராக இருந்தாலும், இந்த புதிய உலக சாதனையை வெல்ல கடினமாக இருக்கும் என்று கின்னஸ் குழு நடுவர் ஆச்சரியத்துடன் தெரிவித்தார். சிமானிலேவை பாராட்டினார்.


Next Story