என்.எல்.சி.யில் தொழில் பழகுனர் பணி


என்.எல்.சி.யில் தொழில் பழகுனர் பணி
x

நெய்வேலியில் இயங்கும் என்.எல்.சி நிறுவனத்தில் தொழில் பழகுனர் பயிற்சி பெறுவதற்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிட்டர், டர்னர், மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், வயர்மேன், கார்பெண்டர், பிளம்பர், ஸ்டெனோகிராபர், வெல்டர் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 901 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஐ.டி.ஐ.யில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சில பிரிவுகளுக்கு பி.எஸ்.சி., பி.பி.ஏ. பி.சி.ஏ. படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். 'மெரிட் லிஸ்ட்', ஆவண சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-11-2022.

விண்ணப்பிக்கும் விதம், விண்ணப்பித்த பிறகு பிரிண்ட் எடுத்து அனுப்பும் விவரம் உள்ளிட்ட விரிவான நடைமுறைகளை https://www.nlcindia.in/new_website/careers/trainee.htm என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story