நோக்கியா 8210 ஸ்மார்ட்போன்


நோக்கியா 8210 ஸ்மார்ட்போன்
x

நோக்கியா மாடல் செல்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக 8210 மாடல் செல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 2.8 அங்குல திரையைக் கொண்டுள்ளது. இதில் 1 கிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி 107 ஒற்றை பிராசஸர் உள்ளது. இதில் 48 எம்.பி. ரேம், 128 எம்.பி. நினைவகம் உள்ளது. நினைவகத் திறனை 32 ஜி.பி. வரை எஸ்.டி. கார்டு மூலம் விரிவாக்கம் செய்ய முடியும். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. வயர்லெஸ் பண்பலை வானொலி வசதி உள்ளது.

இதில் 1450 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 8 மணி நேரம் செயல் படும். நீலம் மற்றும் சிவப்பு வண்ணங்களில் வந்துள்ள இந்த மாடல் செல்போனின் விலை சுமார் ரூ.3,999.

1 More update

Next Story