நோக்கியா சி 12 ஸ்மார்ட்போன்


நோக்கியா சி 12 ஸ்மார்ட்போன்
x

நோக்கியா ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் புதிதாக சி 12 மாடல் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இது 6.3 அங்குல ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இயங்குதளம் உள்ளது. இதில் 1.6 கிகாஹெர்ட்ஸ் திறன் கொண்ட ஆக்டாகோர் யுனிசாக் எஸ்.சி. 986 3 ஏ பிராசஸர் உள்ளது. 2 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் நினைவகத் திறனை அதிகரித்துக் கொள்ளும் வசதி கொண்டது. 2 சிம் கார்டு போடும் வசதி உள்ளது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. நீர் மற்றும் தூசி புகாத வகையிலான தன்மை கொண்டது. 3 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி உள்ளது.

சியான், கருப்பு, பச்சை உள்ளிட்ட கண்கவர் வண்ணங்களில் கிடைக்கும். இதன் விலை சுமார் ரூ.5,999.


Next Story