நோக்கியா எக்ஸ்பிரஸ் ஆடியோ செல்போன்


நோக்கியா எக்ஸ்பிரஸ் ஆடியோ செல்போன்
x

நோக்கியா மொபைல்போன்களைத் தயாரிக்கும் ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இசைப் பிரியர்களின் வசதிக்காக எக்ஸ்பிரஸ் ஆடியோ 5710 என்ற பெயரில் புதிய மாடல் மொபைல்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விற்பனையக விலை சுமார் ரூ.4,999. இதன் பின்புறத்தில் வயர்லெஸ் இயர்போனும் இடம்பெற்றுள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். மேலும் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்பீக்கரும் இதில் உள்ளது.

நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் திறன் மிகு பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இசைப் பிரியர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் இதன் இயர்போனும் தயாரிக்கப்பட்டுள்ளது. உபயோகத்தில் இல்லாதபோது போனின் பின்புறம் வைத்து விட்டால் அது சார்ஜ் ஆகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் திரை 2.4 அங்குலமாகும். 128 எம்.பி. ரேம், 4 எம்.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ கார்டு மூலம் 32 ஜி.பி. வரை இதை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.


Next Story