நவோதயா பள்ளிகளில் வேலை


நவோதயா பள்ளிகளில் வேலை
x

மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் நவோதயா பள்ளிகளில் 1616 காலி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

முதல்வர், முதுகலை ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு போன்ற இதர வகை ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பள்ளி முதல்வர் பதவிக்கு 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 40 வயதுக்கு மிகாமலும், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், இசை, கலை, விளையாட்டு போன்ற இதர வகை ஆசிரியர்கள் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

பதவிகளுக்கு ஏற்ப முதுகலை, இளங்கலை பட்டத்துடன் பி.எட் படிப்பு, இளங்கலை படிப்பு கல்வி தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-7-2022.

மேலும் விரிவான விவரங்களை https://cbseitms.nic.in/nvsrecuritment என்ற இணைய பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

1 More update

Next Story