ஓப்போ ஏ 1 புரோ ஸ்மார்ட்போன்


ஓப்போ ஏ 1 புரோ ஸ்மார்ட்போன்
x

ஓப்போ நிறுவனம் புதிதாக ஏ 1 புரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.7 அங்குல முழு ஹெச்.டி. அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 695 பிராசஸர் உள்ளது.

8 ஜி.பி. ரேம் மற்றும் 12 ஜி.பி. ரேம்களை உள்ள மாடல்கள் 128 ஜி.பி. நினைவகம் மற்றும் 256 ஜி.பி. நினைவகம் கொண்டவை யாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம் உள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 108 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா எல்.இ.டி. பிளாஷ் வசதியுடனும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளன.

இனிமையான இசையை வழங்க இதில் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளது. 4800 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 67 வாட் சூப்பர்வூக் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம், தங்க நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.20,645.


Next Story