ஓப்போ கே 10 ஸ்மார்ட்போன்


ஓப்போ கே 10 ஸ்மார்ட்போன்
x

ஓப்போ நிறுவனம் கே 10 ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.56 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியா டெக் டைமென்சிடி 810 பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. மைக்ரோ எஸ்.டி. கார்டு மூலம் இதை விரிவாக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்கு தளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பின்பகுதியில் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

பக்கவாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. 5000 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம் உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் விலை சுமார் ரூ.17,499.


Next Story