எய்ட்ஸ்: 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேர் பாதிப்பு


எய்ட்ஸ்: 10 ஆண்டுகளில் 17 லட்சம் பேர் பாதிப்பு
x

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 17 லட்சத்துக்கும் அதிகமானோர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (என்.ஏ.சி.ஓ) பதிலளித்துள்ளது.

எனினும் சமீபத்திய ஆண்டுகளில் எச்.ஐ.வி. நோய் பாதிப்புக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 2011 - 2012 வரையிலான காலகட்டத்தில் பாதுகாப்பற்ற உடலுறவு காரணமாக 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதேசயம் 2021-2022-ம் ஆண்டில் இந்த பாதிப்பு எண்ணிக்கை 85 ஆயிரத்து 268 ஆக குறைந்துள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் 3 லட்சத்து 18 ஆயிரத்து 814 பேர் எச்.ஐ.வி பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா (2,84,577), கர்நாடகா (2,12,982), தமிழ்நாடு (1,16,536), உத்தரப் பிரதேசம் (1,10,911), குஜராத் (87,440) ஆகிய மாநிலங்கள் உள்ளன. எய்ட்ஸ் பரவுவதற்கு பாதுகாப்பற்ற உடலுறவு முக்கிய காரணம் என்றாலும், 2011-2021-ம் ஆண்டில் 15 ஆயிரத்து 782 பேர் ரத்த பரிமாற்றம் மூலம் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். தாயிடம் இருந்து குழந்தைக்கு பரவுவதாலும் பாதிப்பு எண்ணிக்கை கூடி இருக்கிறது. 2020-ம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் 23 லட்சத்து 18 ஆயிரத்து 737 பேர் எச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இதில் 81,430 பேர் குழந்தைகள்.

எய்ட்ஸ் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகிறது. அதனால் அவருடைய உடல் அமைப்பு பலவீனமடைகிறது. அதன் காரணமாக சிறிய நோய்த்தொற்று ஏற்பட்டாலும் அதனை எதிர்த்து போராடும் அளவுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாமல் போய்விடுகிறது என்பது உலக சுகாதார அமைப்பின் கருத்தாக இருக்கிறது.

எய்ட்ஸ் ஒரு நபரின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை நேரடியாக தாக்குகிறது. அதனால் அவருடைய உடல் அமைப்பு பலவீனமடைகிறது.


Next Story