பானாசோனிக் ஸ்மார்ட் சலவை இயந்திரம்


பானாசோனிக் ஸ்மார்ட் சலவை இயந்திரம்
x

பானாசோனிக் நிறுவனம் எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக செயல்திறன்கொண்ட சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

டாப் லோடிங் வசதி கொண்டதாக, முழுவதும் தானியங்கி அடிப்படையில் செயல்படும் ஆட்டோமேடிக் மாடலாக இது வந்துள்ளது. அதிக இடத்தை ஆக்கிரமிக்கும் வகையில் அல்லாமல் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பானாசோனிக்கின் மிராய் இயங்குதளத்தை பதிவிறக்கம் செய்து இந்த சலவை இயந்திரத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்க முடியும். 8 கிலோ மாடலின் விலை சுமார் ரூ.19,690. இதில் உள்ளீடாக ஹீட்டர் வசதி உள்ளது. இதனால் விடாப்பிடியான கறைகள், அழுக்குகளை நீக்கும். பாக்டீரியா உள்ளிட்ட நுண் கிருமிகளை துணிகளிலிருந்து நீக்கி ஆரோக்கியமான, சுத்தமான ஆடை கிடைக்க வழி செய்கிறது. குரல் வழி கட்டுப்பாட்டு அமைப்புகளின் மூலமும் இதை இயக்கலாம்.

1 More update

Next Story