பான்டம் ஏர்பட்


பான்டம் ஏர்பட்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் விங்ஸ் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்காக பான்டம் 260 என்ற பெயரில் புதிய வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.

15 மீட்டர் தூரத்திலும் செயல்படும் திறன் கொண்டது. 8 மணி நேரம் தொடர்ந்து செயலாற்றும் வகையிலான பேட்டரி கொண்டது. 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே ஒன்றரை மணி நேரம் இயங்கும். வியர்வை மற்றும் நீர் புகாத தன்மை கொண்டது.

கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வந்துள்ளது. இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எல்.இ.டி. விளக்கும் அழகாக ஒளிரும். இதன் எடை 120 கிராம் ஆகும். இதன் விலை சுமார் ரூ.1,499.


Next Story