போகோ சி 50 ஸ்மார்ட்போன்


போகோ சி 50 ஸ்மார்ட்போன்
x

போகோ நிறுவனம் குறைந்த விலையில் சி 50 மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இதில் 6.52 அங்குல ஹெச்.டி. எல்.சி.டி. திரை உள்ளது. இதில் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 எஸ்.ஓ.சி. பிராசஸர் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்ட்ராய்டு 12 கோ இயங்குதளம் உள்ளது. பின் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இது 2 ஜி.பி. ரேம் மற்றும் 3 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 32 ஜி.பி. நினைவகம் உடையதாகவும் வந்துள்ளது.

இதன் நினைவகத் திறனை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்து கொள்ளலாம். இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 3 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

பச்சை, நீலம் உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த மாடலின் விலை சுமார் ரூ.6,499.


Next Story