போகோ எக்ஸ் 5 ஸ்மார்ட்போன்


போகோ எக்ஸ் 5 ஸ்மார்ட்போன்
x

போகோ நிறுவனம் புதிதாக போகோ எக்ஸ் 5 என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.67 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் அமோலெட் திரையைக் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பக்க வாட்டுப் பகுதியில் விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. ஆக்டாகோர் ஸ்நாப்டிராகன் 695 பிராசஸர் உள்ளது. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது.

பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் செல்பி பிரியர்களுக்கென 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. தூசி, நீர் புகா தன்மை கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. கருப்பு, நீலம், பச்சை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.18,999. 8 ஜி.பி. 256 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.20,999.


Next Story