25 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்...! இளவரசி டயனாவின் கடைசி நிமிடம் குறித்து பிரெஞ்ச் டாக்டர் ...!


25 ஆண்டுகளாகியும் விலகாத மர்மம்...!  இளவரசி டயனாவின் கடைசி நிமிடம் குறித்து பிரெஞ்ச் டாக்டர் ...!
x

1977ல் டயானா தன்னைவிட 13 வயது மூத்தவரான சார்லஸ் உடன் காதல் வயப்பட்டார். டயானா குழந்தையாக இருக்கும்போதே சார்லஸிற்கு டயானாவை தெரியும்

லண்டன்

மக்களின் இளவரசி என அழைக்கப்பட்ட டயானா 1997-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி பாரீஸில் நடந்த கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார். இன்றுடன் அவர் இறந்து 25 ஆண்டுகள் கடந்து விட்டது. இளவரசர் சார்லஸை விவாகரத்து செய்த பின்னர் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளானார்.

டயானா பிரான்ஸஸ் ஸ்பென்சர் 1961ஆம் ஆண்டு, ஜூலை மாதம் முதல் நாள் , நார்போக்கில் பிறந்தார். ஆல்தோர்ப்பின் வைகவுண்ட் மற்றும் வைகவுண்டஸ்சிற்க்கு இளைய மகளாக பிறந்தார் டயானா.

இவர்களது குடும்பமும் இங்கிலாந்தின் மிகப்பெரிய அந்தஸ்து பெற்ற குடும்பமாகும். இவர்களது குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் குடும்பம் என்ற பெயரை பெற்ற குடும்பம்

பள்ளி படிப்பை முடித்த பின்பு சுவிட்சர்லாந்தில் உள்ள இன்ஸ்டியூட் ஆல்பின் விடிமானட்டே என்ற கல்லூரியில் படித்தார். அதன் பின்பு லண்டனிற்கு திரும்பி நைட்ஸ்ப்ரிட்ஜில் உள்ள கிண்டர்கார்டனில் உதவியாளராக பணிபுரிந்தார்.அப்பொழுது தான் அவருக்கு அந்நாட்டு இளவரசர் சார்லஸ் உடனான அறிமுகம் கிடைத்தது.

1977ல் டயானா தன்னைவிட 13 வயது மூத்தவரான சார்லஸ் உடன் காதல் வயப்பட்டார். டயானா குழந்தையாக இருக்கும்போதே சார்லஸிற்கு டயானாவை தெரியும், இவர்கள் குழந்தை பருவங்களில் ஒன்றாக விளையாடியவர்கள்.

1981ம் ஆண்டு பிப் 6ம் தேதி பிரின்ஸ் சார்லஸ் மற்றும் டயானா ஆகியோருக்கு நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டது. அந்த நிச்சயதார்த்தத்தில் அவருக்கு 12 கேரட் ஓவல் சைலோன் சபயர் சுற்றிலும் 14 சாலிட்டர் வைரம் பதிக்கப்பட்ட மோதிரம் டயனாவிற்கு அணிவிக்கப்பட்டது.

1981ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி டயானாவிற்கும் பிரின்ஸ் சார்லஸிற்கும் திருமணம் செயிண்ட் பால் கதீட்ரல் சர்ச்சில் வைத்து நடந்தது.

டயானாவிற்கும் பிரின்ஸ் சார்லஸிற்கும் மனகசப்பு ஏற்பட்டது. இதனால் இவர்கள் 1992ம் ஆண்டு பிரியலாம் என முடிவு செய்தனர். அதன் பின் அதிகாரப்பூர்வமாக 1996ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரிந்துவிட்டனர்.

விவாகரத்திற்கு பின்பு தன் மகன்களை வளர்பதிலும், சமூகசேவையிலும் தான் டயானா அதிகமாக ஈடுபட்டு வந்தார். இதற்கிடையில் டயானா எகிப்தில் உள்ள ஒரு சினிமா தயாரிப்பாளர் டூடி பயீத் உடன் டேட்டிங்கில் இருப்பதாக 1997ல் செய்திகள் வெளியாகின.

கோடீஸ்வரரான தனது காதலர் டோடி பயீத்துடன் இணைந்து இவர் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றது, காதலர் டோடியின் கரு டயானாவின் வயிற்றில் வளர்ந்தது தான் டயானாவின் மரணத்திற்கு காரணம் என கூறப்பட்டது. டயானாவின் மரணம் ஒரு விபத்தால் நடந்தது அல்ல.

இங்கிலாந்தின் உளவுத் துறையின் ரகசிய ஏற்பாட்டின் படி, அரச குடும்பம் தான் டயானாவை கொன்று விட்டது என்று முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

அரச குடும்பத்து ரகசியங்கள் அனைத்தையும் டயானா தெரிந்து வைத்திருக்கிறார். அதுமட்டுமின்றி அரச குடும்பத்தில் இருந்து விலகி சென்றவர் வேறொரு நபரின் கருவை வயிற்றில் சுமப்பதால் அது காலப்போக்கில் அரச குடும்பத்துக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதற்காகவே இளவரசர் பிலிப்பின் உத்தரவின் பேரில் டயானா கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

விபத்துக்கு பின்னர் பாரீசில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு டயானாவை தூக்கி வந்தபோது அவரது வயிற்றை எக்ஸ்-ரே எடுத்து பார்த்த டாக்டர் எலிசபத் டயான் மற்றும் செவிலிப் பெண் ஒருவர் டயானாவின் வயிற்றினுள் 6 – 10 வார கருவினை கண்டதாக மருத்துவமனை குறிப்பேடுகளில் பதிவு செய்துள்ளனர்.

டயானாவும் அவரது காதலர் டோடியும் தனிவிமானம் மூலம் சார்டினியாவில் இருந்து பாரீஸிற்கு வந்தனர். டோடியின் தந்தையும், எகிப்திய தொழிலதிபருமான மொகமது அல் பயத்-யின் ரிட்ஸ் ஓட்டலுக்கு இருவரும் சென்றனர்.

ஓட்டலில் இருந்து வெளியேறி டோடியின் குடியிருப்புக்கு இருவரும் சென்றனர். இவை புகைப்படக்காரர்களால் கவனிக்கப்பட்டன. பின்னர் உணவருந்துவதற்காக உணவகத்திற்கு செல்வதற்கு திட்டமிட்டனர், ஆனால் புகைப்படக்காரர்கள் இவர்களை பின் தொடர்ந்தனர்.

புகைப்படக்காரர்களை தவிர்ப்பதற்காக மீண்டும் ரிட்ஸ் ஓட்டலுக்கு சென்று இரவு உணவை அருந்தியுள்ளனர். இரவு உணவை முடித்த பின்னர், டோடியின் குடியிருப்புக்கு மீண்டும் செல்ல திட்டமிட்டனர்.

ஓட்டலின் வாசலில் நின்று கொண்டு புகைப்படக்காரர்கள் இவர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். இதனால் ஓட்டலின் பின்பக்க வாசல் வழியாக இவர்கள் சென்றுள்ளனர். ஆனால் இதனை கவனித்த புகைப்படக்காரர்கள் விடாமல் பின் தொடர்ந்தனர்.

இவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக கார் ஓட்டுநர் காரை வேகமாக ஓட்டியுள்ளார். அல்மா சுரங்கப்பாதை வழியாக சென்ற கார் பக்கசுவரில் மோதியதால் டயானா – டோடி பயத் இருவருமே விபத்தில் சிக்கினர். இதில் டோடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த டயானா பாரீஸில் உள்ள பிட்டி – சல்பெட்ரியர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 31 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அவர் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகும்,பாரீஸில் உள்ள அல்மா சுரங்கப்பாதையில் என்ன நடந்தது என்பது குறித்து இளவரசி டயானாவை உயிருடன் பார்த்த கடைசி நபர்களில் ஒருவரும், முதலுதவி அளித்த பிரெஞ்ச் டாக்டர் மைலிஸ் கூறியதாவது;-

அந்த சோகமான இரவில் எனது பெயர் எப்போதும் பேசப்படும் என்பதை நான் உணர்ந்தேன். கார் விபத்தை எதிர்கொண்டபோது, ​​ஒரு விருந்து முடிந்து நான் வீட்டிற்கு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தேன். டயானாவுடைய கடைசி நிமிடங்களுக்கு நான் கொஞ்சம் பொறுப்பாக உணர்கிறேன்.

அன்றிரவு சுரங்கப்பாதையில் மெர்சிடிஸ் கிட்டத்தட்ட இரண்டாகப் பிளவுபட்டதை கண்டேன். உடனடியாக நான் விபத்துக்குள்ளான காரை நோக்கி நடந்தேன்.காரின் கதவை திறந்து உள்ளே பார்த்தேன்.

அதில் நான்கு பேர் இருந்தனர். அவர்களில் இருவர் இறந்துவிட்டதாகத் தெரிகிறது, அவர்களிடம் எந்த எதிர்வினையும் இல்லை, சுவாசமும் இல்லை, மற்ற இருவரும், வலது பக்கத்தில், உயிருடன் இருந்தனர், ஆனால் மோசமான நிலையில் இருந்தனர். ஒரு இளம்பெண் முன்பக்கமாக கிடந்தார். அவர் தலையை கீழே வைத்திருந்தார். மூச்சுவிட சிரமப்பட்டார். அவருக்கு விரைவான உதவி தேவையாக இருந்தது அவர் மயக்கத்தில் இருந்தார்.

அவர் சிகிச்சையளித்த பெண் மலடச கணக்கானவர்களால் போற்றப்படும் இங்கிலாந்தின் பொக்கிஷமான டயானா என்ற செய்தியை - உலகின் பிற பகுதிகளுடன் சேர்த்து நானும் அறிந்து கொண்டேன்.

இது ஆச்சரியமானது என்று எனக்குத் தெரியும், ஆனால் இளவரசி டயானாவை நான் அடையாளம் காணவில்லை. நான் காரில் பின் இருக்கையில் உதவி செய்து கொண்டிருந்தேன். அவர் மிகவும் அழகாக இருக்கிறார் என்பதை நான் உணர்ந்தேன், ஆனால் அவருடைய உயிரைக் காப்பாற்ற நான் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் என் கவனம் இருந்தது அந்த பெண் யார் என்று யோசிக்க எனக்கு நேரம் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் ஆங்கிலம் பேசுவதாக எனக்குப் பின்னால் இருந்த ஒருவர் என்னிடம் கூறினார், அதனால் நான் ஆங்கிலம் பேச ஆரம்பித்தேன், நான் ஒரு டாக்டர் என்று கூறி ஆம்புலன்சை அழைத்தேன் ."நான் அவரை ஆறுதல்படுத்த முயற்சித்தேன்.

தீயணைப்பு வீரர்கள் விரைவாக வந்தனர், டயானா பாரீஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சில மணி நேரம் கழித்து இறந்தார். அவளது தோழி டோடி பயீத் மற்றும் டிரைவரும் இறந்தனர்.

அவர் இளவரசி டயானா என்றும், அவர் இறந்துவிட்டார் என்றும் அறிந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது"றகு தன்னம்பிக்கை எழுந்தது. நான் என் வேலையைச் சரியாகச் செய்தேனா?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். நான் எனது மருத்துவப் பேராசிரியர்களுடன் ஆலோசித்தேன். நான் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசித்தே, என்னால் முடிந்த அனைத்தையும் செய்ததாக அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

ஒவ்வொரு முறையும் நான் அல்மா சுரங்கப்பாதை வழியாக செல்லும் போது அந்த நினைவலைகள் திரும்பி வரும் என்று கூறி உள்ளார்.


Next Story