5 மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண்


5 மலைச் சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண்
x

8 ஆயிரம் மீட்டருக்கும் அதிகமான உயரம் கொண்ட 5 சிகரங்களில் ஏறிய முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார், பிரியங்கா மோஹித். 30 வயதாகும் இவர் மகாராஷ்டிரா மாநிலத் திலுள்ள சதாரா பகுதியை சேர்ந்தவர்.

சிறு வயது முதலே மலையேற்றம் மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார். நாளடைவில் உயரமான மலைப்பகுதிகளில் ஏறி சாகசம் படைக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கி இருக்கிறது. ஆரம்ப காலகட்டத்தில் மகாராஷ் டிராவில் உள்ள சஹ்யாத்ரி மலைத்தொடரில் உள்ள மலைகளில் ஏறி பயிற்சி பெற்றிருக்கிறார்.

2012-ம் ஆண்டு உத்தரகாண்டில் உள்ள இமயமலையின் கர்வால் பிரிவின் மலைப்பகுதியான பந்தர்பஞ்ச் மலைக்கு சென்றடைந்து உற்சாகத்துடன் திரும்பினார். அதனை யடுத்து இமாச்சலப் பிரதேசத்தின் லாஹவுல் மற்றும் ஸ்பிட்டி மாவட்டத்தில் உள்ள இரண்டாவது மிக உயரமான சிகரமான மெந்தோசா மலை (6,443 மீ) மீது ஏறி அசத்தினார்.

2013-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் (8,849 மீ) சிகரத்தை அடைந்து அசத்தினார். 2016-ம் ஆண்டு மவுண்ட் மகாலு (8,485 மீ) மற்றும் கிளிமஞ்சாரோ மலை (5,895 மீ) சிகரங்களை சென்றடைந்தார். இந்த பயண அனுபவங்கள் உயரமான மலை சிகரங்களில் ஏறி சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை பிரியங்காவுக்குள் ஏற்படுத்தி இருக்கிறது.

2018-ம் ஆண்டு 8,516 மீ உயரம் கொண்ட லோட்சே மலைச்சிகரத்தின் மீது ஏறி பலருடைய கவனத்தை ஈர்த்தார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உலகின் 10-வது உயரமான மலைச் சிகரமான அன்னபூர்ணா மலை (8,091 மீ) மீது ஏறினார். இத் தகைய உயரமான மலைச் சிகரத்தில் ஏறிய முதல் இந்திய பெண்மணி என்ற சாதனையை படைத்தார். சமீபத்தில் கஞ்சன் ஜங்கா மலை சிரகத்தை சென்றடைந்தார். அதன் உயரம், 8,586 மீட்டர். இதன் மூலம் 8 ஆயிரம் மீட்டருக்கும் உயரமான மலைச் சிகரங்களை முதன் முதலில் ஏறிய இந்திய பெண்மணி என்ற சாதனையை தன்வசப்படுத்தி இருக்கிறார்.

பிரியங்கா ஏறிய மலைச் சிகரங்களில் பெரும்பாலானவை கரடுமுரடான பாதைகளையும், அடர்ந்த பனி சூழலையும் கொண்டவை. வெப்பம், குளிர், பனி உள்ளிட்ட பருவகால மாறுபாடுகளை சமாளித்து இலக்கை எட்டிப்பிடித்திருக்கிறார்.

தற்போது பெங்களூருவில் வசிக்கும் பிரியங்கா, 2017-2018-ம் ஆண்டுக்கான சாகச விளையாட்டுகளுக்கான மகாராஷ்டிரா அரசின் 'சிவ் சத்ரபதி' மாநில விருதையும் பெற்றுள்ளார்.


Next Story