ரியல்மி நார்ஸோ 50 புரோ


ரியல்மி நார்ஸோ 50 புரோ
x

ரியல்மி நிறுவனம் நார்ஸோ 50 என்ற பெயரிலான புதிய ரக ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

5-ஜி அலைக்கற்றையில் செயல்படும் வகையில் இது உருவாக்கப் பட்டுள்ளது. இது 6.4 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் திரையைக் கொண்டுள்ளது. இதில் ஆக்டாகோர் மீடியா டெக் டைமென்சிடி பிராசஸர் உள்ளது. இது 6 ஜி.பி. மற்றும் 8 ஜி.பி. ரேம்களைக் கொண்டதாகவும், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் உள்ளது. பின்புறம் 48 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 16 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி, 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது.

6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.21,999. 8 ஜி.பி. ரேம் உள்ள மாடல் விலை சுமார் ரூ.23,999.


Next Story