ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்


ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்
x

ரியல்மி நிறுவனம் புதிதாக 11 அங்குல டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இதில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 695 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்டைலஸ் பேனாவும் உள்ளது. இது 2-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதன் பின்புறம் 13 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும், முன்புறம் 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமராவும் உள்ளது. 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது.

இதில் 8,340 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது விரைவாக சார்ஜ் ஆக வசதியாக 33 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.14,962. 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.18,418.


Next Story