ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்


ரியல்மி பேட் எக்ஸ் டேப்லெட்
x

ரியல்மி நிறுவனம் புதிதாக பேட் எக்ஸ் என்ற பெயரில் 11 அங்குல எல்.சி.டி. திரையைக் கொண்ட டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இதில் ஸ்நாப்டிராகன் 695 எஸ்.ஓ.சி. பிராசஸர் உள்ளது. 4 ஜி.பி., 6 ஜி.பி. ரேம் மற்றும் 64 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம். ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் செயல்படக் கூடியது.

இதில் 13 மெகாபிக்ஸெல் கேமரா பின்புறமும், 8 மெகா பிக்ஸெல் கேமரா முன்புறமும் உள்ளது. டால்பி அட்மோஸ் குவாட் ஸ்பீக்கர்கள் உள்ளன. 8340 எம்.ஏ.ஹெச். திரையைக் கொண்ட இந்த டேப்லெட் 33 வாட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. இத்துடன் உபரி பாகமாக ஸ்மார்ட் கீ போர்டு மற்றும் ரியல்மி பென்சில் வந்துள்ளது. கீ போர்டு புளூடூத் இணைப்பு மூலம் செயல் படும். பென்சில் சார்ஜ் ஆக இதில் வசதி உள்ளது.

நீலம், கிரே வண்ணங்களில் வந்துள்ள இந்த டேப்லெட் விலை சுமார் ரூ.19,999 முதல் ஆரம்பமாகிறது.


Next Story