சாம்சங் `எகோ பபுள்'


சாம்சங் `எகோ பபுள்
x

வீட்டு உபயோக மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரிய நிறுவனமான சாம்சங், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு `எகோ பபுள்’ என்ற பெயரிலான சலவை இயந்திரத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேல்புறமாக துணிகளைப் போடும் வகையில் (டாப் லோடிங்) இது வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மாடல்களை விட இது 73 சதவீதம் மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்தும், அதேபோல 19 சதவீதம் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தும். அத்துடன் துணி களுக்கு 20 சதவீதம் கூடுதல் பாதுகாப்பை அளிக்கும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. முழுவதும் தானியங்கி அடிப்படையிலான டிஜிட்டல் இன்வெர்டர் டெக்னாலஜி கொண்டது.

இதில் உள்ளீடாக ஹீட்டர் உள்ளதால் 60 டிகிரி சென்டிகிரேடு அளவுக்கு வெந்நீர் உருவாகி 99.9 சதவீத பாக்டீரியாவை அழிக்கிறது. அத்துடன் விடாப்பிடியான கறைகள், எண்ணெய் பிசுக்குகளை நீக்குகிறது. 29 நிமிடத்தில் துணிகளைத் துவைத்துவிடும். இது முந்தைய சலவை நேரத்தைவிட 40 சதவீதம் குறைவாகும். சாம்சங்கின் ஸ்மார்ட் திங் செயலியை பயன்படுத்துவதன் மூலம் இதை ஸ்மார்ட்போன் மூலமும் இயக்க முடியும்.

9 கிலோ மற்றும் 10 கிலோ அளவுகளில் இது வந்துள்ளது. இன்வெர்டர் மோட்டாருக்கு 12 ஆண்டு உத்திரவாதம் அளிக்கப்படுவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.19 ஆயிரம் முதல் சுமார் ரூ.35 ஆயிரம் வரையாகும்.


Next Story