சாம்சங் ஏர் பியூரிபயர்

மின்னணு சாதனங்கள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் நிறுவனம் வீடுகளுக்கான காற்றை சுத்தப்படுத்தும் ஏர் பியூரிபயரை அறிமுகம் செய்துள்ளது.
இது 645 சதுர அடி பரப்பு அளவு கொண்ட அறைக்கு மிகவும் பொருத்தமானதாகும். இதை படுக்கை அறை, பிட்னஸ் ஸ்டூடியோ, மருத்துவமனையின் அறைகள் உள்ளிட்டவற்றிலும் பயன்படுத்தலாம்.
இதில் ஏ.எக்ஸ் 46 மற்றும் ஏ.எக்ஸ் 32 என்று இரண்டு மாடல்கள் வந்துள்ளன. இது அறையினுள் உள்ள மாசுக்களை 99.97% அளவுக்கு வடி கட்டி சுத்தமான காற்று நிலவ வழிவகை செய்யும். தூசு, பாக்டீரியா, ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய கிருமிகள் உள்ளிட்டவற்றை சுத்தமாக வடிகட்டிவிடும். ஸ்மார்ட்போன் மூலமும் இதை இயக்கலாம். இதனால் வீட்டிற்குள் நுழைவதற்கு முன்பாகவே ஸ்மார்ட்போன் மூலம் இதை செயல்படுத்த முடியும்.
இதில் காற்றின் தூய்மையை உணர்த்த இன்டிகேட்டர் உள்ளது. ஏ.எக்ஸ் 32 மாடலின் விலை சுமார் ரூ.12,990. ஏ.எக்ஸ் 46 மாடலின் விலை சுமார் ரூ.32,990.
Related Tags :
Next Story






