சாம்சங் கேலக்ஸி ஏ.04 இ


சாம்சங் கேலக்ஸி ஏ.04 இ
x

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸில் தற்போது ஏ.04 இ மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.5 அங்குல ஹெச்.டி. பிளஸ் எல்.சி.டி. திரையைக் கொண்டது. இதில் ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இது 3 ஜி.பி. ரேம், 32 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் எடை 188 கிராம். நீலம், காப்பர் நிறங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனின் விலை சுமார் ரூ.9,299.


Next Story