சாம்சங் கேலக்ஸி எப் 13


சாம்சங் கேலக்ஸி எப் 13
x

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களில் கேலக்ஸி மாடல் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் தற்போது எப் 13 மாடலை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இது 16.62 செ.மீ. அளவிலான முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. நீண்ட நேரம் செயல்பட வசதியாக இதில் 6 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப் பட்டுள்ளது. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளதால், போன் பயன்படுத்தாம லிருந்தால் 3 நாட்கள் வரை பேட்டரி திறன் நிலைத்திருக்கும்.

இதில் தானியங்கி தகவல் மாற்ற இணைப்பு வசதி உள்ளது. இத்தகைய நுட்பம் ஸ்மார்ட்போன் பிரிவில் இதில்தான் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நண்பர்கள், உறவினர் களின் தொடர்பு எண் சிம் 1-ல் இடம்பெற்றிருந்து அது நெட்வொர்க் பகுதியில் இல்லாது போனால் சிம் 2 மூலம் தொடர்பு கொள்ள முடியும். அதேபோல தனிநபர் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. 8 ஜி.பி. ரேம் கொண்ட இதில் ஆக்டாகோர் எக்ஸிநோஸ் 850 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் நினைவகத் திறனை 1 டி.பி. வரை அதிகரித்துக் கொள்ளலாம். பின்புறம் 50 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட 3 கேமராக்கள் உள்ளன. செல்பி பிரியர்களுக்கென முன்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது. நீலம், தாமிர நிறம், பச்சை உள்ளிட்ட கண்கவர் நிறங்களில் கிடைக்கும். 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.11,999. இதில் 4 ஜி.பி.ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடல் விலை சுமார் ரூ.12,999.


Next Story