சாம்சங் கேமிங் மானிட்டர்ஸ்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் புதிதாக வீடியோ கேம் பிரியர்களுக்கென கேமிங் மானிட்டர்களை உருவாக்கியுள்ளது.
ஒடிஸி ஓலெட் ஜி 8 என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. இத்துடன் ஒடிஸி ஜி 7 மற்றும் ஜி 7 நியோ என்ற பெயரிலான மாடல்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிக விரைவான செயல்திறன் கொண்டவையாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் திரையாகவும் அடுத்த ஒரு விநாடியில் இதை கேமிங் மானிட்டராகவும் மாற்றிக் கொள்ள முடியும். இவை 34 அங்குல திரையைக் கொண்டவை.
இதில் நியோ ஜி 7 மாடல் தட்டையான மினி எல்.இ.டி. மாடலாகும். இது 43 அங்குல அளவில் வந்துள்ளது. ஒடிஸி ஓலெட் ஜி 8 மானிட்டரின் விலை சுமார் ரூ.75 லட்சம். நியோ ஜி 7 மாடலின் விலை சுமார் ரூ.1 லட்சம் (32 அங்குலம்) மற்றும் சுமார் ரூ.1.30 லட்சம் (42 அங்குலம்).
Related Tags :
Next Story






