ஷார்ப் குடிநீர் சுத்திகரிப்பான்


ஷார்ப் குடிநீர் சுத்திகரிப்பான்
x

ஜப்பானின் ஷார்ப் நிறுவனம் குடிநீர் சுத்திகரிப்பானை அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா பெருந்தொற்று பரவலுக்குப்பிறகு பலரும் சுய சுகாதாரத்தில் பெரும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். முக கவசம் அணிவது, கைகளை கழுவுவது மட்டுமின்றி, சுகாதாரமான குடிநீரை பருகுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதனாலேயே காற்று சுத்திகரிப்பான், நீர் சுத்திகரிப்பான் உள்ளிட்டவற்றை முன்னணி நிறுவனங்கள் தயாரிக்கத் தொடங்கியுள்ளன. அந்த வரிசையில் ஜப்பானின் ஷார்ப் நிறுவனம் குடிநீர் சுத்திகரிப்பானை அறிமுகம் செய்துள்ளது. டபிள்யூ.ஜே.ஆர் 515.வி.ஹெச் என்ற பெயரில் வந்துள்ள இந்த குடிநீர் சுத்திகரிப்பானின் விலை சுமார் ரூ.35,500.

இதில் 6 நிலைகளில் குடிநீரை சுத்திகரிக்கும் வசதி உள்ளது. இதில் ஏ.எப். விநியோக தொழில்நுட்பம் உள்ளது. இது மிகவும் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்கிறது. சிறிய தூசு, பாக்டீரியா, நுண் கிருமிகள், ரசாயனங்கள், நச்சு உள்ளிட்டவற்றை வடிகட்டிவிடும். அத்துடன் குடிநீருக்கு மிகுந்த சுவையையும் அளிக்கும். இதில் உயர் தரத்திலான மறு சவ்வூடு பரவலுக்கான வடிகட்டி (மெம்பரேன்) உள்ளது. மேலும் புற ஊதாக் கதிர்கள் தண்ணீரில் உள்ள கிருமிகளை அழித்துவிடும் தன்மை கொண்டது. சுவற்றின் மீது மாட்டும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. வடிகட்டியின் செயல்திறனை உணர்த்த எல்.இ.டி. விளக்கு உள்ளது.


Next Story