'பார்க்கிங்' செய்வதில் சாதனை


பார்க்கிங் செய்வதில் சாதனை
x

லண்டன் ஓட்டுநர் பால் ஸ்விப்ட், தனது மினி கூப்பர் காரை 30 செ.மீ. நீளமுள்ள இடத்தில் பார்க்கிங் செய்து கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

'பிரிட்டிஷ் மோட்டார் ஷோ'வில் இரண்டு கார்களுக்கு இடையில் 30 செ.மீ. இடைவெளியில் தனது காரை பார்க்கிங் செய்து, அதை வீடியோவாக பதிந்திருக்கிறார். அதுவே வைரலாகி, கின்னஸ் சாதனையாகி இருக்கிறது.

இந்த சாதனையை நிகழ்த்திய பிறகு, மீண்டும் 2 முறை மக்களுக்கு பார்க்கிங் முறையை செய்து காண்பித்து வியப்பில் ஆழ்த்தினார்.

2020-ம் ஆண்டு இங்கிலாந்தின் அலஸ்டர் மொபாட் என்பவர் இது போன்ற சாதனையை செய்துள்ளார். இடைவெளி மிகவும் குறைவான இடத்தில் காரை பார்க்கிங் செய்தார். இதுதான் உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை பால் ஸ்விப்ட் முறியடித்துள்ளார்.


Next Story