தோட்டக்கலை பயிர்களுக்கு மானியம்

நுண்ணீர் பாசன திட்டத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.
காய்கறிகள், பழங்கள், மலர்கள், சுவைதாளித பயிர்கள், போன்ற தோட்டக்கலை பயிர்களில் தரமான நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்களை பெறுவதற்கு மொத்த செலவில் 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மாடி தோட்டத்துக்கு மானிய விலையில் விதைகள், வளர் பைகள், இயற்கை உரங்கள் வழங்கப்படுகின்றன. நுண்ணீர் பாசன திட்டத்துக்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது. சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும், குத்தகை விவசாயிகளாக இருந்தால் 10 ஆண்டு காலத்திற்கு குத்தகை எடுத்து குத்தகையை பதிவு செய்த விவசாயிகளும் இத்திட்டத்தின் மூலம் பயன் பெறலாம்.
கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக அரசு அறிமுகப்படுத்தியுள்ள கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்படும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள விவசாயிகளுக்கும், சிறு, குறு, மகளிர் விவசாயிகளுக்கும் இந்த திட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை,புகைப்படம், வங்கி பாஸ் புத்தகத்தின் முதல் பக்கத்தின் நகல் போன்ற ஆவணங்கள் தேவைப்படும். மானியம் பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பெயரை https://www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.






