மேம்படுத்தப்பட்ட சுஸுகி ஜிக்ஸர்

இருசக்கர வாகன உற்பத்தியில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் சுஸுகி நிறுவனத்தின் ஜிக்ஸர் மாடலில் மேம்படுத்தப்பட்ட மாடல் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.40 லட்சம் முதல் ஆரம்பமாகிறது. பல்வேறு வண்ணங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு இதன் மூலம் கிடைத்துள்ளது. இதில் எஸ்.எப் 250. மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.2.02 லட்சம்.
ஜிக்ஸர் மாடலில் நான்கு வேரியன்ட்கள் (ஜிக்ஸர், ஜிக்ஸர் எஸ்.எப்., ஜிக்ஸர் 250 மற்றும் ஜிக்ஸர் எஸ்.எப் 250) உள்ளன. மெட்டாலிக் ஸ்டெல்லர் நீலம், மேட் கருப்பு, மெட்டாலிக் சில்வர், டிரைடன் நீலம் உள்ளிட்ட வண்ணங்களில் இது வந்துள்ளது. ஜிக்ஸர் மாடல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதனால் தொடர் நேவிகேஷன் வசதி கிடைக்கிறது.
இது 155 சி.சி. திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 13.4 பி.ஹெச்.பி. திறனையும், 13.8 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப் படுத்தும். இது 5 கியர்களைக் கொண்டுள்ளது. ஜிக்ஸர் 250 மற்றும் எஸ்.எப் 250 மாடல்கள் 249 சி.சி. திறன் கொண்ட ஆயில் கூல்டு என்ஜினைக் கொண்டவை.
இது 26.13 பி.ஹெச்.பி. திறனையும், 22.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது. இந்த இரண்டு மாடல்களும் 6 கியர்களைக் கொண்டவை.






