மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் இ.வி.


மேம்படுத்தப்பட்ட நெக்ஸான் இ.வி.
x

டாடா நெக்ஸான் இ.வி. மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த காரின் பேட்டரி மிகவும் சக்தி வாய்ந்தது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பேட்டரி கார் உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனத்தின் நெக்ஸான் மாடல் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இந்த மாடல் அறிமுகமாகி மூன்று ஆண்டுகளாகிறது. இந்நிலையில் இந்த மாடலில் மேம்பட்ட அம்சங்களைப் புகுத்தி புதிதாக அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். டாடா நெக்ஸான் இ.வி. மேக்ஸ் என்ற பெயரில் அறிமுகமாகியுள்ள இந்த காரின் பேட்டரி மிகவும் சக்தி வாய்ந்தது. இது சோதனை ஓட்டத்தில், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டால் 453 கி.மீ. தூரம் ஓடியுள்ளதாக இந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இ.வி. மேக்ஸ் மாடல் விலை சுமார் ரூ.16.49 லட்சம். எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதி, தானியங்கி கிளைமேட் கண்ட்ரோல் வசதி, புரொஜெக்டர் முகப்பு விளக்கு, பொத்தான் விசையில் ஸ்டார்ட் செய்யும் வசதி, டிஜிட்டல் டி.எப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இஸட் கனெக்ட், பின் சக்கரங் களுக்கு டிஸ்க் பிரேக் வசதி ஆகியன இதன் சிறப்பம்சமாகும். இதே பிரிவில் பிரீமியம் மாடலான இ.வி. மேக்ஸ் எக்ஸ்.இஸட். பிளஸ் மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.18.49 லட்சம்.

இந்த மாடலில் காற்றோட்ட வசதி உள்ள இருக்கை கள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஏர் பியூரிபயர், திறந்து மூடும் வகையிலான மேற்கூரை இன்போ டெயின்மென்ட் சிஸ்டம், இனிய இசையை வழங்க ஹார்மன் ஸ்பீக்கர்கள், 16 அங்குல அலாய் சக்கரம், சிறிய அழகிய (சுறா துடுப்பு) ஆன்டெனா ஆகியன உள்ளன.

1 More update

Next Story