டி.சி.எல். டேப் 10


டி.சி.எல். டேப் 10
x

டி.சி.எல். நிறுவனம் 5-ஜி திறன் கொண்ட டேப்லெட்டை அறிமுகம் செய்துள்ளது.

இது 10.1 அங்குல முழு ஹெச்.டி. பிளஸ் திரையைக் கொண்டுள்ளது. இதில் மீடியா டெக் கொம்பேனியோ 800 டி சிப்செட் பிராசஸர் உள்ளது. இதன் பின்புறம் 8 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது.

இதில் 2 ஸ்பீக்கர்கள், ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 4 ஜி.பி. ரேம் மற்றும் 32 ஜி.பி. நினைவகம் உள்ளது. மைக்ரோ எஸ்.டி. கார்டு பயன்படுத்துவதன் மூலம் இதை 512 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்ய முடியும்.

ஸ்லிம்மான வடிவமைப்பு மற்றும் குறைந்த எடை (490 கிராம்) கொண்டதாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 8 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.23,868.


Next Story