பாப் 7 புரோ ஸ்மார்ட்போன்


பாப் 7 புரோ ஸ்மார்ட்போன்
x

ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் டெக்னோ நிறுவனம் பாப் 7 புரோ என்ற பெயரிலான ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

இது 6.56 அங்குல திரையைக் கொண்டது. இதில் 2 கிஹாஹெர்ட்ஸ் குவாட்கோர் மீடியாடெக் பிராசஸர் உள்ளது. இரண்டு சிம்கார்டு போடும் வசதி கொண்டது. 2 ஜி.பி. மற்றும் 3 ஜி.பி. ரேம் கொண்டது. 64 ஜி.பி. நினைவகம் உடையது. இதை 256 ஜி.பி. வரை விரிவாக்கம் செய்யலாம்.

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், பின்புறம் 12 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 5 மெகாபிக்ஸெல் கேமராவும் உள்ளது. 5 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி 10 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.6,799. 3 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. நினைவகம் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.7,299.


Next Story