ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம் 8 சீரிஸ்


ஆப்பிள் ஸ்மார்ட் கடிகாரம் 8 சீரிஸ்
x

பிரீமியம் தயாரிப்புகளை வழங்குவதில் தனித்துவம் மிக்கதாகத் திகழும் ஆப்பிள் நிறுவனம் 8 சீரிஸில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதய துடிப்பு, அவசர கால அழைப்பு, கீழே விழுவதை உணர்த்துவது உள்ளிட்ட பல சிறப்பம்சங்களைக் கொண்டது. கார் ஓட்டும் போது மோதல் நிகழ்வதை எச்சரிக்கும். 18 மணி நேரம் செயல்படும் திறன் கொண்டது. கண்கவர் வண்ணங் களில் வந்துள்ளது.

நீர் மற்றும் தூசி புகாத வடிவமைப்பு கொண்டது. ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு, ஈ.சி.ஜி., உடல் சூடு உள்ளிட்டவற்றையும் பெண்களின் மாதவிடாய் சுழற்சி மற்றும் கருவுறுவது குறித்த தகவலையும் இது அளிக்கும். ஜி.பி.எஸ். மற்றும் செல்லுலர் இணைப்பு கொண்டது. இதன் விலை சுமார் ரூ.45,900.


Next Story