உடல் உறுப்புகள் உணர்த்தும் உண்மைகள்


உடல் உறுப்புகள் உணர்த்தும் உண்மைகள்
x

பெண்கள் தங்கள் உடல் நலனில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அதற்கேற்ப உடலில் ஏதேனும் வலி, சவுகரியங்களை உணர்ந்தால் அலட்சியமாக எடுத்துக்கொள்ளும் பெண்கள் நிறைய பேர் உள்ளனர்.

ஒருசில அறிகுறிகளை உடல் உறுப்புகள் வெளிப்படுத்தினால் அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஆரம்ப நிலையிலேயே மருத்துவ சிகிச்சைகள், பரிசோதனைகளை மேற்கொண்டு அறிகுறிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும். என்னென்ன அறிகுறிகள் எத்தகைய பாதிப்பை உணர்த்தும் என்று பார்ப்போம்.

கால் பிடிப்பு:

நடைப்பயிற்சியின் போதோ அல்லது திடீரென்றோ காலில் பிடிப்புகள் ஏற்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று நீரிழப்பு, மற்றொன்று மெக்னீசியம் குறைபாடு. நீரிழப்பை தவிர்க்க தினமும் 6 முதல் 7 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும். கீரை, வாழைப்பழம், தக்காளி போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மெக்னீசியம் குறைபாட்டை தவிர்க்கலாம்.

வறண்ட சருமம்:

சருமம் உலர்ந்த நிலையில் இருப்பதாக உணர்ந்தால் உடனே ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும். இல்லாவிட்டால் முன்கூட்டியே முதுமை எட்டிப்பார்க்கும். ஆம்! சருமம் வறண்டு போனால் சுருக்கங்கள் விரைவாகவே உண்டாகிவிடும். உடலில் வைட்டமின் ஈ சத்து இல்லாததால் இது நடக்கிறது. உணவில் மீன் சேர்த்துக்கொள்ள வேண்டும். சருமத்தில் வைட்டமின் ஈ எண்ணெயை தடவி மசாஜ் செய்யலாம்.

குளிர்ச்சியான உணவு:

சிலர் குளிர்ச்சியான உணவுகளை விரும்பி சாப்பிடுவார்கள். பிரிட்ஜ் பிரீசரில் இருக்கும் ஐஸ்கட்டிகளை எடுத்து ருசிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த அறிகுறிகள் ரத்தசோகையை உணர்த்தலாம். அதாவது இரும்புசத்து குறைபாடு கொண்டவர்கள் இந்த பிரச்சினையை எதிர்கொள்வார்கள். பொதுவாக சோர்வாக இருப்பது ரத்தசோகையின் ஆரம்பக்கட்ட அறிகுறியாகும். சோர்வாக இருக்கும்போது ஐஸ் போன்றவற்றை விரும்பினால் உடனே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

நகங்களில் வெடிப்பு:

நகங்களில் வெடிப்போ, சேதமோ ஏற்பட்டால் உடலில் பயோட்டின், புரதம் மற்றும் துத்தநாகம் குறைபாடு இருப்பதன் அறிகுறிகளாகும். உணவில் முட்டை, தானியங்கள், நட்ஸ்கள், பாலாடைக்கட்டி, பால் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

சோர்வாக எழுந்திருத்தல்:

சில சமயங்களில் நன்கு ஆழ்ந்து தூங்கினால் எழும்போது சோர்வு எட்டிப்பார்ப்பது இயல் பானது. ஆனால் தினமும் தூங்கி எழும்போது சோர்வை உணர்ந்தால் அது மன அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம். தினமும் 6 முதல் 7 மணி நேரம் தூங்குவது அவசியமானது. தூங்கும்போது டிஜிட்டல் சாதனங்களை பார்வை யிடும் நேரத்தை குறைக்க வேண்டும். எண்ணெய்களை கொண்டு மசாஜ் செய்து வருவதும் நல்லது.

எரிச்சல்:

உடலில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டால் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் தேவை என்று அர்த்தம். போதிய ஓய்வின்மை, பணிச்சுமை அதற்கு காரணமாக இருக்கலாம்.

1 More update

Next Story