மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு


மருத்துவர்களுக்கு பணி வாய்ப்பு
x

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் (எம்.ஆர்.பி) மூலம் 1,021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்.பி.பி.எஸ். படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அத்துடன் 12 மாதங்களுக்கு குறையாமல் ஹவுஸ் சர்ஜனாக பணியாற்றி இருக்க வேண்டும்.

இந்த பணி நியமனத்துக்கு தமிழ் மொழித் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 1 மணி நேரம் நடைபெறும் அந்த தேர்வில் 50 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். அதில் 40 சதவீதம் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து எழுத்து தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25-10-2022. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு உள்ளிட்ட விரிவான விவரங்களை தெரிந்து கொள்வதற்கு https://www.mrb.tn.gov.in/ என்ற இணைய பக்கத்தை பார்வையிடலாம்.


Next Story