மூன்று வேடத்தில் டொவினோ தாமஸ்


மூன்று வேடத்தில் டொவினோ தாமஸ்
x

டொவினோ தாமஸ் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

மலையாள சினிமாவில் இளம் கதாநாயகர்களில் முன்னணி நடிகராக இருப்பவர் டொவினோ தாமஸ். 2012-ம் ஆண்டு 'பிரபுவின்டே மக்கள்' படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் நுழைந்த இவர், ஆரம்பத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். பின்னர் துணை கதாபாத்திரங்களில் நடித்தார். 2017-ம் ஆண்டு 'ஒரு மெக்சிகன் அபரதா' என்ற படத்தில் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைத்தது.

2018-ம் ஆண்டு வெளியான 'தீவண்டி' படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. 2019-ம் ஆண்டு வெளியான 'கல்கி' திரைப்படமும் வெற்றிப்படமாக அமைந்தது. அதுவரை சாக்லெட் பாய் கதாபாத்திரத்தில் நடித்து வந்த டொவினோ தாமஸ், இந்தப் படத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருந்தார். அது அவருக்கு பொருந்திப் போனதால், ரசிகர்களின் வரவேற்பு அதிகமாக கிடைத்தது.

கதாநாயகனாக நடிக்கத் தொடங்கிய 5 வருடங்களில், எந்த இமேஜிக்குள்ளும் சிக்காத நடிகராக டொவினோ தாமஸ் இருக்கிறார். எந்தக் கதாபாத்திரத்திலும் தன்னை பொருத்திக் கொள்ளும் திறமை பெற்றவராகவும் இருக்கிறார். இதனால் மலையாள சினிமாவில் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு பெருகி வருகிறது.

இந்த நிலையில் டொவினோ தாமஸ், 'அஜயண்டே ரந்தம் மோசனம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலகட்டங்களில் நடப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் மூன்று கதாபாத்திரங்களில் ெடாவினோ தாமஸ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மூன்று கதாநாயகிகளும் நடிக்க இருக்கிறார்கள். இதில் கீர்த்தி ஷெட்டி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட நிலையில், இப்போது மற்றொரு நாயகியாக ஐஸ்வர்யா ராேஜஷ் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

1 More update

Next Story