விங்ஸ் பேன்டம் 110 நெக்பேண்ட்


விங்ஸ் பேன்டம் 110 நெக்பேண்ட்
x

வீடியோகேம் பிரியர்களுக்கு ஏற்ற வகையிலான நெக்பேண்டை விங்ஸ் நிறுவனம் பேன்டம் 110 என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் தொடர்ந்து 20 மணி நேரம் செயல்படும். இது புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. ஸ்மார்ட்போனுடன் விரைவான இணைப்பைப் பெறக் கூடியது.

சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் மைக்ரோ போன் உள்ளது. இதனால் மறுமுனையில் இருப்பவருக்கு குரல் தெளிவாகக் கேட்கும். பச்சை, நீலம், சிவப்பு, கருப்பு உள்ளிட்ட நிறங்களில் வந்துள்ளது. இந்த நெக்பேண்டின் விலை சுமார் ரூ.699.


Next Story