53 வயது பெண்ணின் ஆனந்த நடனம்


53 வயது பெண்ணின் ஆனந்த நடனம்
x

சண்டிகரை சேர்ந்த 53 வயதாகும் பெண்மணி நீரு சைனி பரிமாணங்களில் பயணித்து இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

முதுமை பருவத்தை எட்டினாலும் தங்கள் தோற்றத்தில் இளமையை தக்கவைத்துக்கொள்வதற்கு பலரும் பல்வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். அவை ஏதாவதொரு வகையில் உடற்பயிற்சியுடன் தொடர்பு கொண்டிருக்கின்றன. சண்டிகரை சேர்ந்த 53 வயதாகும் பெண்மணி நீரு சைனி, ஆசிரியர், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் பிரியர், ஓட்டப்பந்தய வீராங்கனை, மலையேற்றம் செய்பவர் போன்ற பரிமாணங்களில் பயணித்து இளமை தோற்றத்தை தக்கவைத்துக்கொண்டிருக்கிறார்.

வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் கூந்தலில் நரைமுடிகள் தென்பட்டாலும் இளமை துடிப்புடன் வலம் வருகிறார். தனது இளமை தோற்றத்திற்கு வலு சேர்க்க நடனத்தையும் கையில் எடுத்துவிட்டார். ஷாருக்கான் - கரீனா கபூர் நடிப்பில் வெளியான ரா.ஒன் படத்தில் இடம் பெற்ற சம்மக் சல்லோ பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார். சிவப்பு நிற புடவை அணிந்து கரீனாவை போல் அங்க அசைவுகளை கச்சிதமாக வெளிப்படுத்தி பலரது கவனத்தை ஈர்த்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவில் ''யோகா, சாகசம் மற்றும் விளையாட்டு பிரியர்'' என்று தன்னை குறிப்பிட்டிருக்கும் நீருவின் பிட்னஸ் ரகசியத்தை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

''வயது என்பது எண் மட்டுமே. ஆனால் இந்த வயதில் அது பொருத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பது முக்கியமான விஷயம்'' என்று ஒருவர் குறிப்பிட்டுள்ளார். ''இந்த பெண்மணி நிச்சயம் வயதானவர் அல்ல. நடுத்தர வயதினரை போல் அவரது தோற்றம் உள்ளது. கூந்தலுக்கு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைல் செய்திருப்பது போல் தோன்றுகிறது. அவரது தோற்றத்தை நம்பமுடியவில்லை'' என்று மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story