100 நாட்களை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்


100 நாட்களை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்
x

Aris Messinis/AFP/Getty Images

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்கள் ஆகின்றன.

100 நாட்களை கடந்த உக்ரைன் போர்: வெளியான முக்கிய தகவல்கள்

உக்ரைன் - ரஷியா இடையிலான போர் தாக்குதல் 100 நாட்களை கடந்துள்ள நிலையில் நாட்டின் 20 சதவீத நிலம் ரஷியா வசம் சென்றுவிட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

மேலும் ரஷ்யப் படைகள் உக்ரேனிய நிலப்பரப்பில் சுமார் 48,000 சதுர மைல்களை ஆக்கிரமித்துள்ளன - இது நியூயார்க் மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பை விட பெரியது என அவர் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ஐரோப்பிய கண்டம் கண்டுள்ள மிக மோசமான போரான உக்ரைன் போா் தொடங்கி, வெள்ளிக்கிழமையுடன் 100 நாட்கள் ஆகின்றன.

இந்த 100 நாட்களில், உக்ரைனின் புச்சா நகர வீதிகளில் கிடந்த பொதுமக்களின் சடலங்கள், 'சிறுவா்கள்' என்று எழுதப்பட்டிருந்தும் குண்டுவீச்சில் தரைமட்டமான மரியுபோல் திரையங்கு, ரஷிய ஏவுகணைத் தாக்குதலில் சேதமடைந்த கிரமாடோா்ஸ்க் ரயில் நிலையம் என்ற பல்வேறு காட்சிகள் உலகை அதிரச் செய்தன.

உக்ரைன் போரின் அடையாளச் சின்னங்களாக உலகம் முழுவதும் பரவிய அந்தப் படங்கள் திகழ்கின்றன. இந்தப் போரில் எத்தனை ராணுவ வீரா்கள், எத்தனை பொதுமக்கள் உயிரிழந்தனா் என்கிற முழு விவரம் இதுவரை யாருக்கும் தெரியாது.

உயிரிழப்புகள் குறித்து உக்ரைன் அதிகாரிகள் கூறுவது சில நேரங்களில் மிகைப்படுத்தப்பட்டதாக இருக்கின்றன. பொதுமகக்களின் கோபத்துக்கு உள்ளாகிவிடக் கூடாது என்பதற்காக சில நேரங்களில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை குறைத்தும் சொல்லப்பட்டுள்ளது.

ரஷியத் தரப்பில் ராணுவ வீரா்கள் மற்றும் ஆதரவுப் படையினரின் உயிரிழப்பு விவரங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் பொதுமக்கள் உயிரிழப்பு குறித்த விவரங்கள் குறித்து அந்த நாட்டு அரசு தொடா்ந்து மவுனம் காத்து வருகிறது.

மேலும், பொதுமக்கள் உயிரிழப்பு விவரங்களை மறைப்பதற்காக ரஷியப் படையினா் சடலங்களை பெருங்குழிகளில் கொட்டி மூடி வருவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

இதனால், இந்தப் போரில் உயிரிழப்பு விவரங்களைத் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியாவிட்டாலும், பொதுமக்களில் பல்லாயிரக்கணக்கானோா் கொல்லப்பட்டுள்ளனா் என்று உக்ரைன் அதிபா் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா்.

தலைநகா் கீவில் இருந்தபடி லக்ஸம்பா்க் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் ஆற்றிய உரையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா். இந்த 100 நாட்களில் தாங்கள் 30,000 வீரா்களை இழந்துள்ளதாகக் கூறினார்.

போா் தொடங்கியதிலிருந்து தங்கள் நாட்டின் மீது இதுவரை 2,478 ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளதாக அவா் குற்றம் சாட்டினாா். உக்ரைன் மீது தொடுத்துள்ள போரால் ரஷியாவும் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது. இதுவரை இந்தப் போரில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரஷிய வீரா்கள் உயிரிழந்தனா்.

இந்த எண்ணிக்கை, 1979-89 ஆப்கன் போரில் உயிரிழந்த ரச்கிய வீரா்கள் மற்றும் 1994-2000-ஆம் ஆண்டின் 2 செசன்ய போா்களில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையைவிட அதிகம் என்று ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

நேட்டோ அமைப்பில் தங்களது அண்டை நாடான உக்ரைன் இணைந்தால், அது தங்களது தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று ரஷியா கூறி வருகிறது.

இந்த நிலையில் ரஷியாவில் புதினுடைய அதிகாரத்தின் பிடி தளர்ந்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்க உளவுத்துறையின் மூத்த அதிகாரிகள் மூன்று பேர், புதினைக் கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி குறித்த விவரங்களை வெளியிட்டுள்ளார்கள்.

ஆனாலும், பென்டகன் வட்டாரத்தைச் சேர்ந்த பெயர் வெளியிடாத அந்த அதிகாரிகள், எப்படி புதின் கொலை முயற்சியில் தப்பினார் என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கவில்லை.

அந்த அதிகாரிகளில் ஒருவர், தேசிய உளவுத்துறை இயக்குநர் அலுவலகத்தைச் சேர்ந்தவர், ஒருவர் விமானப்படையிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி, மற்றொருவர், பாதுகாப்பு உளவுத்துறை ஏஜன்சியைச் சேர்ந்தவர். அவர்கள், எப்படியாவது ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணம் கொண்ட, புதினுடைய, இல்லாததை இருப்பதைப் போல் கற்பனை செய்துகொள்ளும் சித்தப்பிரமை என்னும் மன நலப் பிரச்சினையால் உக்ரைனில் பிரச்சினை மேலும் தீவிரமடையலாம் என்று கூறியுள்ளார்கள்.

அதே நேரத்தில், இதே விஷயம்தான் புதின் அணு ஆயுதங்களைப் பிரயோகிக்காமல் இருப்பதற்கும் காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன், புதினுடைய ஆட்சிக்காலத்தில் இதுவரை அவர் இவ்வளவு உக்கிரம் காட்டியதில்லை என்று கூறும் அமெரிக்க உளவுத்துறை அதிகாரி ஒருவர், முடிவு நெருங்கிவிட்டதை அனைவரும் உணரத் துவங்கிவிட்டார்கள் என்கிறார்.


Next Story