ஜியோமி ஸ்மார்ட் ஸ்பீக்கர்


ஜியோமி ஸ்மார்ட் ஸ்பீக்கர்
x

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஜியோமி நிறுவனம் ஐ.ஆர். கண்ட்ரோல் வசதி கொண்ட புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கரை அறிமுகம் செய்துள்ளது.

இதன் மூலம் வீடுகளில் பயன்படுத்தப்படும் சில ஸ்மார்ட் சாதனங்களை குரல் வழி மூலம் கட்டுப்படுத்தலாம். இதை மற்றொரு ஸ்பீக்கருடன் இணைத்தும் பயன்படுத்தலாம். கருப்பு வண்ணத்தில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை சுமார் ரூ.4,999.

இதில் எல்.இ.டி. டிஜிட்டல் கடிகாரமும் உள்ளது. குரோம்காஸ்ட் இணைப்பு, கூகுள் அசிஸ்டென்ட் மூலம் செயல்படக் கூடியது. புளூடூத் 5.0 இணைப்பு வசதி கொண்டது.

12 வோல்ட் திறன் கொண்ட இந்த ஸ்பீக்கரின் எடை 6.28 கி.கி. இதில் அலுமினியம் மோட்டார் பயன்படுத்தப் பட்டுள்ளது. அது நீண்ட காலம் செயல்பட வழி வகுக்கிறது.


Next Story