யமஹா எப்.இஸட்.எஸ். எப்.ஐ. வி 4 டீலக்ஸ்


யமஹா எப்.இஸட்.எஸ். எப்.ஐ. வி 4 டீலக்ஸ்
x

இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள யமஹா மோட்டார் சைக்கிள் நிறுவனம் புதிதாக எப்.இஸட்.எஸ். எப்.ஐ. வி 4 டீலக்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

இத்துடன் எஸ்.இஸட்.எக்ஸ்., எம்.டி 15 வி 2 டீலக்ஸ் மற்றும் ஆர்.15 எம். ஆகிய மாடல்களையும் அறிமுகப்படுத்த உள்ளது. அனைத்து மாடல்களும் டிராக்ஷன் கண்ட்ரோல் வசதியுடன் மேம்படுத்தப்பட்ட மாடல்களாக அறிமுகம் செய்யப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது இக்னீஷியன் டயமிங் மற்றும் பியூயல் இன்ஜெக்ஷன் நுட்பம் கொண்டது. இப்புதிய மாடலில் முகப்பு விளக்கு வித்தியாசமானதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் எல்.இ.டி. பிளாஷிங் வசதி இருப்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இத்துடன் புளூடூத் இணைப்பு வசதி, யமஹாவின் ஒய் கனெக்ட் வசதி, ஏ.பி.எஸ். வசதி மற்றும் முன் சக்கரங்களுக்கு டிஸ்க் பிரேக் வசதி ஆகியவை உள்ளன.

பன்முக செயல்பாடுகளைக் கொண்ட தாக எல்.சி.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உள்ளது. இது 149 சி.சி. திறன் கொண்டது. 12.4 பி.எஸ். திறனை 7,250 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். இதேபோல 13.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 5,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். ஆர். 15 எம் மாடலில் டி.எப்.டி. மீட்டர் மற்றும் எந்த கியரில் வாகனம் செல்கிறது என்பதை உணர்த்தும் ஷிப்டிங் வசதி உள்ளது.

மேலும் சாலையின் தன்மைக்கேற்ப வாகனம் செல்லும் விதத்தை தேர்வு செய்யும் வசதியும் உள்ளது. இது தற்போது கண்கவர் வண்ணங்களில் (கருப்பு, வெர்மிலியான், ரேசிங் நீலம்) வந்துள்ளது. இந்த மாடல்கள் அனைத்துமே லிக்விட் கூல்டு என்ஜினைக் கொண்டவை. நான்கு ஸ்டிரோக் எஸ்.ஓ.ஹெச்.சி., 4 வால்வு மற்றும் 6 கியர் களைக் கொண்டவை.

18.4 பி.எஸ். திறனை 10 ஆயிரம் ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். அதேபோல 14.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 7,500 ஆர்.பி.எம். சுழற்சியில் வெளிப்படுத்தும். எப்.இஸட்.எஸ் எப்.ஐ வி 4 டீலக்ஸ் மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.1,27,400. எஸ்.இஸட்.எக்ஸ். (கரு நீல நிறம்) மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.1,36,900, ஆர்.15 எம் மாடல் விற்பனையக விலை சுமார் ரூ.1,93,900, ஆர்.15 வி 4 (கருப்பு நிறம் ) மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.1,81,900., எம்.டி 15 வி 2 டீலக்ஸ் (மெட்டாலிக் கருப்பு) மாடலின் விற்பனையக விலை சுமார் ரூ.1,68,400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய மாடல்கள் அனைத்துமே யூரோ 20 புகை விதி கட்டுப்பாடுகளின்படி உருவாக்கப்பட்டுள்ளதால் இவை சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவை என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story