யமஹா வயர்லெஸ் இயர்போன்


யமஹா வயர்லெஸ் இயர்போன்
x

இசை சார்ந்த கருவிகள் தயாரிப்பில் முன்னிலை வகிக்கும் யமஹா நிறுவனம் வயர்லெஸ் இயர்போனை டி.டபிள்யூ.இ 3., பி.டி.டபிள்யூ.இ 5.பி. என்ற பெயர்களில் அறிமுகம் செய்துள்ளது.

யமஹாவின் முழுமையான சவுண்ட் தொழில்நுட்பம் கொண்டது. இவை இரண்டுமே புளூடூத் இணைப்பு வசதி கொண்டவை. ஒரே தொடுதலில் பலவித செயல்பாடுகளைக் கொண்டதாக இவை வந்துள்ளன.

இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் செயல்படும். சார்ஜிங் கேசில் 24 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான பேட்டரி உள்ளது. இது காதுகளில் கச்சிதமாக பொருந்தும் வகையில் சிறப்பான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. காதின் மேல் புறம் மாட்டும் வகையிலான வடிவமைப்பு உள்ளதால், இதை வசதிக்கேற்ப பயன்படுத்த முடியும். துல்லியமான ஒலியை வழங்கவும், பேசுபவரது குரலை துல்லியமாகக் கேட்கவும் இதில் வசதி உள்ளது. இயர்போனை ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்படும். சார்ஜிங் கேசில் 22 மணி நேரத்திற்குத் தேவையான பேட்டரி உள்ளது. டி.டபிள்யூ.இ 3.பி. மாடல் விலை சுமார் ரூ.8,490. டி.டபிள்யூ.இ 5.பி. மாடல் விலை சுமார் ரூ.14,200.

1 More update

Next Story