கோவையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார் பரபரப்பு...!


கோவையில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த  கார்  பரபரப்பு...!
x

கோவை, கோவையில் சாலையின் நடுவே கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை

கோவை ஈச்சனாரி அருகே ரெயில்வே மேம்பாலத்தின் அடியில் இன்று காலை 11 மணியளவில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த காரில் திடீரென கரும்புகை வெளியேறியது.

காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அதிகளவு கரும்புகை வெளியேறி பற்றி கார் எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டு அதிர்ச்சியில் திகைத்து நின்றனர். காலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீய்ச்சியடித்து அணைத்தனர்.


1 More update

Next Story