கிணற்றில் முதியவர் பிணம்


கிணற்றில் முதியவர் பிணம்
x

அரக்கோணம் அருகே கிணற்றில் முதியவர் பிணமாக கிடந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த முள்வாய் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் முதியவர் பிணம் ஒன்று மிதந்தது.

தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் முள்வாய் அடுத்த பால்வாய் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 70), என்பதும் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்ததும் தெரிய வந்தது. இது குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியின் சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story